Tamil Love Quotes | காதல் மேற்கோள்கள்

Beautiful Tamil Love Quotes

Tamil Love Quotes : இன்று உங்களுக்காக தமிழில் சில சிறந்த காதல் மேற்கோள்களை தயார் செய்துள்ளோம்.  நாங்கள் இங்கு வழங்கிய அனைத்து மேற்கோள்களும் நாமே மற்றும் பிற சமூக ஊடகங்களில் இருந்து உருவாக்கப்பட்டு, மிகவும் அற்புதமான முறையில் வழங்கப்படுகின்றன.  இந்த மேற்கோள்களை நீங்கள் விரும்புவீர்கள்.  இந்தக் கட்டுரையில் 150+ காதல் மேற்கோள்களை முன்வைக்கப் போகிறோம்.  உங்களுக்கு முன்னால்  அனைத்து மேற்கோள்களும் இதயத்தைத் தொடும் மேற்கோள்கள்.  இன்றைய காலத்தில் சிறுவர் சிறுமிகள் காதல் கதைகளை விரும்புவது போல், தமிழில் காதல் மேற்கோள்களையும் படிக்க விரும்புகிறார்கள்.  சில சிறந்த காதல் மேற்கோள்களைப் பார்ப்போம்.

Tamil Love Quotes Images

tamil love quotes

1

சிரித்தாலும் அழுதாலும் உன்னோடு நானே, அடித்தாலும் அணைத்தாலும் என்னோடு நீயே, நினைத்தாலும் துடித்தாலும் எப்போதும் நாமே..

2

விரும்பிய ஒருவருடன் வாழத்தான் திருமணம் அவசியம், விரும்பியவருக்குள்
வாழ அழகான காதல் போதும். 💖

3

நீ என் வாழ்வில்
வராமல் இருந்திருந்தால்
என் நினைவிலும் தி இல்லாமல்
நிம்மதியாக இருந்திருப்பேன்…

tamil love quotes images

4

அவளின் மனதில்
ஆனால் என் உலகமே
நான் இல்லைதான்,
அவள் மட்டும் தான்…!

best tamil love quotes

5

இப்படியே உறைந்துப்போவோமா அன்பின் அணைப்பிலே சுவாசங்கள் யாவும் சுகமாகுதே நம் நெருக்கத்திலே…

6

பேருந்தின் ஜன்னலோரத்தில் யாரோ
ஒருத்தியின் கடைக்கண் பார்வை படிகளில்
நிற்கும் என்னை கீழே தள்ளப்பார்க்கிறது…

7

நம்மை தொலைத்தவர்கள்
இனி திரும்ப வர போவதில்லை என
தெரிந்தும் வேறு உறவுடன் இணையாமல் காத்திருக்கும் உணர்வு தான் காதல்.

tamil love quotes in tamil

8

மறந்த நினைவுகளாய் உன் மனதில் நான் இருந்தாலும் மறக்கமுடியா உறவாய் என் இதயத்தை முழுதாய்ஆ க்கிரமித்து விட்டாய்…

9

புரிய தெரியாதவர்களிடம்
அகப்பட்ட அன்பைப்போல்அடிக்கடி கவலைக்கிடமாகிவிடுகிறது சிலரின் காதல்.

Best Tamil Love Quotes

10

நீயோ தவித்துப் போகிறாய் என்னை ஏற்க முடியாமல்.. நானோ துடித்துப்போகிறேன்
உன்னோடு வாழ முடியாமல்.

11

நினைவுகள் என்பது உயிரோட்டமானது
சில நினைவுகள் மனதை ரணமாக்கும்
சில நினைவுகள் புன்னகைக்கும் இவை இரண்டும் கலந்துதான் காதல்..

12

எதிர்பார்த்து விட்டு கிடைக்காமல் போன பின் வருந்துவதை விட எதிர்பார்ப்பே தவறானது என புரியும் போது தான் மனம் உடைந்து போகிறது.

 

காதல் மேற்கோள்கள்

13

உன் மீது பிரியப்பட்டிருக்கிறேன். என்றுத் லான்ன ேபோலும், எப்போதும் உன் கோபம் என்றாலும்கொஞ்சல்கள் என்றாலும் கொண்டாடி கொள்ளும் மனம்.

14

இல்வாழ்வில் எதுவும்
மாறவில்லை, எல்லாமுமாக
இருந்தவர்கள் எல்லாம்
இல்லாமற் போனதை தவிர…

15

நிறையவே பேசிவிட்டோம் என வார்த்தைகள் குறையுமிடத்தில் பிரியப்பட்ட அன்பொன்று
கேள்விக்குறியாய் நிற்கிறது,
இப்பொழுது எவ்வளவு பிடிக்குமென

16

ஒன்றை மறக்க
மற்றொன்றைத் தேடும்
போலியான மனிதர்களிடம் உண்மையான அன்பை எதிர்பார்ப்பது மிகப்பெரிய
முட்டாள்தனம்….

beautiful tamil love quotes

17

விடுதலையில்லா சட்டம் வேண்டும் உன் காதல் பிடிக்குள் அகபட்டுக்கிடக்க..

18

பார்த்தும் பார்காதது போல எனைத் கடந்து செல்லும் உன்னை இன்னுமின்னும் உன்னை
நெருங்கிடவே செய்கிறது…

19

சண்டைகளற்ற உறவுகள்
சாத்தியமில்லை தான்
சண்டையிட்டு விலகிப்போகும்
குருணம் வந்து வழிமறிக்கும்
அன்பெல்லாம் ஒரு சிலருக்கு
தான் சாத்தியம்…

20

கரை அலைக்கு சொந்தம் இல்லை என்ற போதிலும் கரையை தேடி வருவதை அலை நிறுத்துவதில்லை அது போலதான் என் அன்பும் உன்னை தேடி வருவதை நிறுத்துவதில்லை.

Tamil Love Quotes For Her

21

உனக்காக நான் இருந்த ஒவ்வொரு நொடிகளிலும், எனக்காக நீ இல்லை என்று உணர்ந்த பின்னும், என் காதல் வாழ துடிக்கிறது உன்னுடன்…

22

காதலில் தோற்று போனவர்களுக்கு ஆறுதல் பரிசாக சில நினைவுகளை கொடுத்து செல்கின்றனர்…

23

உன்னை கடந்து போகவும் தெம்பில்லை மறந்து போகவும் மனமில்லை இளைப்பாற இடம் கேட்கிறேன்

24

விழி மோதும் காதலில் வழி தெரியாது அலைந்திடும் விண்மேகம் போல் உன்னை நாடியே அலைகிறது
என் நினைவுகள் அன்பே.

25

வாழ்வில் யாரோவாக
வருபவர்கள் தான்
எல்லாமாகிப் போகிறார்கள்..

26

முதலும் நீ முடிவும் நீ என
முடிவான பின்
முற்றுப்புள்ளிக்கு இடம் ஏது.

27

ஒரு துளி அன்புக்கு
தேடி அலையும்
போது தான் உன்
அன்பு கிடைத்தது
பெருமழையாய்..!

28

உதறி உதறி தள்ளினாலும் உன்னையே
தேடி வரும் சிறகில்லாத பறவை நான்.

29

என்னில் களவாடிய பொழுதுகள் அத்தனையும் காதலென என்னிடம் திருப்பிதரும் மாயவள் நீயடி..!!

30

காதலில் அன்பை கொடுக்கிறவங்களை விட
அல்வா கொடுக்குறவங்கள
தான் அதிகம் நம்புறாங்க…

Tamil Love Quotes For Him

31

அவள் என் வாழ்வோடு
வருவாள் என
காத்திருந்த
எனக்கு மிஞ்சியது..
அவளோடு பயணம் செய்த
சுகமான
அனுபவங்கள் மட்டுமே..!

32

அனுதினமும் தழுவலில் இருந்து நழுவி ஓடும் நிலவை ஒருபோதும் வெறுத்திடாத மேகத்தின் தூய காதலை
போல் ஓர் காதல் வேண்டும்…

33

ஒருவரிடத்தில் அன்பு
கிடைக்காது என்று தெரிந்தும்
எதிர்பார்த்து காத்திருப்பது
நம் மனதிற்கு நாமே செய்யும்
துரோகமாகும்

34

என்னை விட்டு நீ விலக
நினைக்கும் போதுதான்
உன்னிடம் இன்னும்
நெருங்கி வரத்தோன்றுகிறது.

35

அன்பு இல்லாமல் பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட உரிமையோடு
திட்டும் ஒரு வார்த்தையில்
இருப்பது தான் உண்மையான அன்பு.

36

பெண் அன்பில் ஆட்சி செய்ய
நினைக்கும் போது,
ஆண் அவள் அன்பில் அடங்கி போக
நினைப்பதுவே அழகான காதல்

37

பொய்யான உறவுகளுக்கு முன்னால்
புன்னகையும் ஒரு பொய் தான்..
உண்மையான உறவுகளுக்கு முன்னால்
கோபம் கூட புன்னகை தான்..

38

நேரம் கடந்த நள்ளிரவு உரையாடல்களில்
இறுதியான இரவு வணக்கம் உரைத்த பின்னும் நீளும் குறுஞ்செய்திகள். இது காதலா நட்பா இனம் புரியா உறவு

39

நகர்ந்து கொண்டே இருக்கும் இந்த உலகில் உன் நினைவுகள் மட்டுமே
நிலையானவை எனக்கு..

40

நம் உறவு
என்றேனும்
உயிர்ப்பித்து
விடாதா…
என்றெண்ணத்தில்
தான் சுற்றித்திரிகிறது
நம் நினைவுகள்…

Tamil Love Quotes In Tamil

41

நமக்காக எழுதப்பட்ட புத்தகத்தில் விட்டுப்போன வரிகளாய் நம் காதல்.!

42

தொல்லை என நீயும் என்னை நினைத்தாலே உன்நிம்மதியை
ஸ்ரீ பெற துணை புரிந்து உன்
பிரிவை நான் சேர்ந்தாலும் சந்தோஷம்..

43

சில உறவுகளை பிரியமனம் வருவதில்லை என்றாலும் காலம் பிரித்து வைக்கிறது.. விடைபெறும் போது உணர்வுகளை கொன்று தின்னும் சொல்லப்படாத காதல் வாழ்வின் மறக்க முடியாதது.

44

என்னை விரும்பிய மனம் கண்டு நான் விரும்பினேன், நான் விரும்பும் நேரத்தில் அவள் என்னை மறந்து விட்டாள்.

45

வாங்க போங்க என்பதில் ஆரம்பித்து போப்பா என்று பழகி, போய்யா என்று நெருங்கி வந்து போடா என்று சொல்வதில் முடிவு பெறுகிறது அவள் அன்பு

46

நமக்கு பிடிசவங்க கிட்ட பேச விஷயம் ஏதும் இல்லாத போதும் ஏதாவது பேச வேண்டும் என்று தோன்றுவதில் இருக்கிறது அவங்க மீதான எனது அன்பு..

47

சண்டையிட்டு முட்டிகொண்டஇரு கடிகார முட்கள் திரும்பவும் ஒன்று சேர ஒரு மணி நேரமாகும் ஆனால் உன்னை விட்டு பிரிந்து ஒரு நிமிடம் கூட என்னால் இருக்க முடியாது.

48

கொடுத்தால் திரும்ப
கிடைக்காது என்று
– தெரிந்தும் கொடுக்கப்படுகின்றன
சில அன்பு கடன்கள்…

49

நான் உன்னை
அணைக்கிறேன்,
ரீ என்னோடு சேர்த்து
என் காதலையும் அணைத்துக் கொள்கிறாய்

50

எதர்ச்சையாக கண்ணில் பட்டவள்
நாளைய வாழ்க்கையின் எதிர்பார்ப்பாய் கடந்து செல்கிறாள்…Instagram II @tamil.love.quotes

காதல் மேற்கோள்கள்

51

நம்ம கோவத்தில் இருக்க அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்களே
நமக்காக உறவுகள்….

52

தெரிந்தே உந்தன் நினைவுகளை வலிகளாக ஏற்றுகொள்கிறேன். நீ யாரென்றே தெரியாமல் கற்பனையில் காதலாக என் உயிர் பிரியும் வரையில்

53

நீயும் நானும் இருக்கும் இடம் தூரமாக
இருந்தாலும் உன் மனதில் நானும்,என்
மனதில் நீயும் மிக அருகில் தான் இருக்கிறோம்

54

முதல் காதல் மட்டுமே உண்மையானது பின்பு வருவதெல்லாம் முதல் காதலில் ஏற்ப்பட்ட காயங்களுக்கான மருந்து மட்டுமே…

55

மௌனம் அழகாவதும்
தண்டனையாவதும்
நாம் நேசிப்பவர்
நமக்களிக்கும் பரிசு..

 

மனதில் உள்ள கவலைகளை நினைத்து
பார்க்கும் போது தான் தெரியுது,
நாம் எவ்வளவு குப்பைக்கு நடுவில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை.

56

மௌனம் சாதிக்கிறார் என்று தெரிந்தும் பதிலுக்காக காத்திருப்பதும் விலக நினைக்கிறார் என்று தெரிந்தும் வருகைக்காக காத்திருப்பதும் முட்டாள் மனதிற்கு சலிக்காத ஒரு செயல்.

57

நீ நேசிக்கும்
இதயத்தில்
பல ஆண்டுகள்
இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார்
அன்பின் அர்த்தம் புரியும்…

58

இப்போத்தான் தெரியுது நாம
பேசாமலே நிறையபேரை மிஸ்பண்ணிருக்கோம் என்று..!!

59

ரீ யாரென்று தெரியாமல்
தொடங்கிய அன்பில்,இப்போது நான் யாரென்றேதெரியாமல் போய்விட்டேன்…

Tamil Love Quotes In One Line

60

எந்தன் கனவோடு நீ மறைந்து விடாதே எந்தன் நினைவோடு நீ கலந்துவிடு எந்தன் உயிர் உன்னோடு வாழ்ந்திடவே!

61

அவளுக்கு நான் என்ன
உறவென்று எனக்கு
தெரியவில்லை, ஆனால்
அவளை கண்ட உடன் அவள்
எனக்கான உறவு என்று உணர்ந்தேன்.

62

உன் மூச்சு காற்று பட்டதால் மூக்கின் மேல் முகப்பரு, நினைவுகூறுகிறது முப்பொழுதும் உன் கற்பனைகளாய்..

63

விவாதங்கள் எல்லாம் அர்த்தம்
இல்லாமலே போகின்றது
விளக்கங்கள் தந்த போதிலும்
புரிந்திட மனம் இல்லாத போது..

64

அன்பை தேடுவதை
அடியோடு நிறுத்திவிட்டன்
உள்ளம் சொல்கிறது
சோகங்கள் போதுமென்று…

65

பிடித்துப்போன பின்பு
பிரியமாய் சுமக்கும்
பாரம் அவ்வளவாய்
கனப்பதில்லை…

66

என்றோ ஒருநாள்
நிராகரிக்கப்பட்டு விடுவோம்
என்ற பயத்திலேயே வெளிப்படுத்தாமல் பல பிரியங்கள் மனதில் புதைந்து போகின்றன…

67

அன்பே உந்தன் உள்ளங்கை அளவுள்ள இதய நிலத்தில் எனக்கும் கொஞ்சம் இடம் கொடுத்தால் நானும் கொஞ்சம் பட்டா போட்டு கொள்வேன்…

68

சில புரியாத உறவுகளில் புரியாமல்
பிரிய கூடாத அன்பை வைத்துவிட்டுபிரிந்தும் புரியாத புதிராய் புது உணர்வுஇது நட்பா காதலா என்று…

69

அழ வைப்பவரிடமே
ஆறுதல் தேடி நிற்பது அன்பின் வரமா சாபமா….

70

மழை நின்றதும் மறைந்து போகும் மண்வாசம் போல அவள் அன்பும் ஒரு நாள் மறைந்து போனது…

Short Tamil Love Quotes

71

இந்த காதல் பரமபதத்தில் சிலருக்கு பாம்பு கொத்தி விடுகிறது,சிலருக்கு ஏணி தூக்கிவிடுகிறது ஆனா இந்த single பசங்களுக்கு தாயமே விழமாட்டேங்குது…

72

மறக்க வேண்டியதை மனதினுள்
மறைத்து வைப்பதும், நினைக்க
வேண்டியதை மறந்து தொலைப்பதும், தான் இந்த இதயத்தின் வேலை…

73

நீண்ட நாள் கழித்து ஸ்கூல் crush அ பார்க்கும் போது இவ்வளவு வார்த்தைகள் இருந்தும் நான் மௌனமாகிறேன் ஆனால் அவள் மௌனத்தில் ஆயிரம் வார்த்தை பேசுகிறாள்…

74

உந்தன் கரம் பற்றிடும்
போதெல்லாம் என் ஆயுள் ரேகையும்
கூடுதடி.., விட்டுவிலகிடாதே
ஆயுள் ரேகையும் குறையுமடி..

75

அவ்வப்போது
என் மகிழ்ச்சி தூண்டிலில்
சிக்கும் அன்பு மீன் அவள்..

76

தனி தனியே உறவுகளை தேட
வேண்டாமென இறைவன் படைத்து அனுப்பிய மொத்த உறவும் நீயடி..

77

வலியா? மருந்தா? நீ யாரென்ற
தேடலில் அவஸ்தையாய் அனுபவிக்கிறேன் உன் அன்பை..

78

உன் அன்பும், என் அன்பும் ஒருபோதும்
நம்மை ஏமாற்றியது இல்லை.
என்றும் கொடியதடி பிரியம் காட்டு பழையபடி.

79

எல்லா
சிதல்களுக்குள்ளும்
பிரிக்க முடியாத
இரு அன்பின் அவஸ்தை
நினைவுகளாய்…..

80

என் வறட்சியான
மன நிலத்தில் பற்றிப்படர்ந்த
பசுமைக் கொடி அவள்.’

81

அடிமையாக்கி உனை ஆளவேண்டும்
என்ற எண்ணமில்லை,
உன்னை அரவணைத்து உன் அன்போடு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணமே.

Beautiful Tamil Love Quotes For Him

82

என்னை ஆளும் ஆளுமையே நித்தமும் உன் நினைவுதான் மீண்டும் வா
மீளாதுயரில் இருந்து என்னை மீட்க..

83

இது தான் உன்னை பார்க்கும் கடைசி சந்திப்பு எனும் போது தான் உன்னோடு வாழ வேண்டும் என்ற ஏக்கமும், நீயில்லாமல் வாழ போகும் நாட்களின் பயமும் கூடுகிறது.

84

பொய்களும் கற்பனைகளும் இல்லாமல் ஏதேனும் கதைகள் சுவைக்கும் என்றால் அது நம் காதல் கதைதான்…

85

உன்னோடு செல்ல சண்டை போடுவதெல்லாம் உந்தன் கொஞ்சல்களோடு கூடிய கெஞ்சலுக்கே.

86

சாலையோர பேருந்து நிறுத்தத்தில் வேண்டும் என்றே உனக்காக நான் தவற விட்ட பேருந்துகள் சொல்லும் உனக்கான
என் காத்திருப்புகளை.

87

தினமும் உன்னுடன் இணைந்து
ஒரு குவளை தேநீர் பருக ஆசை
என்னை நீ புரிந்து கொள்ள,
உன்னுடன் நான் புரிதல் கொள்ள

88

வெற்று காகிதத்தில் கையெழுத்து இடுவதை போல என் வெற்று இதயத்தின் ஓரத்தில் ஒரே ஒரு கையெழுத்து இட்டு விடு உன் காதலை உனக்கே தெரியாமல் மொத்தமாய் எழுதி வாங்கி விடுகிறேன்.

89

என்னை நீ திட்டி விட்டு எட்டிச்செல்வதை விட மௌனமாக புன்னகைத்து செல்லும் போது மனம் மீண்டும் தவறு செய்யவே விரும்புகிறது உன் மௌன புன்னகையை ரசித்திட.

90

நில்லாமல் நீள வேண்டும் நீன் உடனான இவ்விசைப்பயணம்.

91

தொடர்கதையாய்
போராடும்
வாழ்கையில்..!!
முற்றுப்புள்ளியாய்
உன்னுள்
முடங்கி விட ஆசை..!!

அவளுக்கான தமிழ் காதல் மேற்கோள்கள்

92

உன்னிடம் என் காதலை எப்படி சொல்வது
என்று தெரியவில்லை,
என்னோடு வா வாழ்ந்து காட்டுகிறேன்
உன் மீதான என் காதலை..

93

பெரிதாய் எனக்கு எந்த பேராசையும் இல்லை அவள் விழிகள் கண்ணீர் சிந்தும் முன் துடைத்திடும் விரலாய் அவளோடு நான்
இருந்தாலே போதும்.

94

சில நேரம் பூக்களுமாய், சில நேரம் முட்களுமாய் பயணிக்கிறது, உன்
மீதான காதல் பயணம்.

95

விடுதலை வேண்டிடா ஆயுள் கைதி நான், உன்னுள் சிறைபிடித்து கொ(ல்)ள்..

96

விடுதலை வேண்டிடா ஆயுள் கைதி நான், உன்னுள் சிறைபிடித்து கொ(ல்)ள்..

97

நான் அவளுக்கு நெற்றியில் குங்குமம் வைக்கும் தருணத்திற்காகவே, கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் கோயிலுக்கு செல்கின்றேன் அவளோடு.

98

உடலால் அழகாய் இருந்தால் இவ்வுலகம் உன்னை ரசிக்கும். உள்ளத்தால் அழகாயிருந்தால் உன்னை நேசித்தவன் மட்டும் ரசிப்பான்.

99

உன்னிடம் மட்டும் எவ்வளவு
நேரம் பேசினாலும் தொலைபேசியில் அழைப்பை துண்டிக்க மட்டும்
மனம் வருவதில்லை…

100

பொய் என தெரிந்தும்
போலியான உன் காதலை
தூக்கி சுமக்க ஆசைப்படுகிறது
என் இதயம்

101

உன் நெருக்கம் அதிகரித்த பின்பே
இந்த உலகம் எனக்கு புதியதானது…

அவருக்கான தமிழ் காதல் மேற்கோள்கள்

102

நம் கோபங்களின் அர்த்தம்
புரியாதவர்களுக்கு நம் அன்பின் ஆழம் புரியாது அவர்களிடம் கோபத்தை காட்டுவதும்
வீண் அன்பை எதிர்பார்ப்பதும் வீண்

103

காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உந்தன் காதல் நியாபகங்கள் தினம்
தினம்
மரண தண்டனை விதிக்கிறது…

104

விடியலே வேண்டாமென இரவை விரும்புதே என் மனம் உன்
நெருக்கத்திலிருந்து மீள மனமில்லாமல்..

105

என் இதயப்படகின் துடுப்பு நீ தானடி, நான் இனி கரை சேர்வதும், கடலில் மிதப்பதும் உன்னால் தானடி.

106

என் விடியலை காணவில்லை
அருகினில் நீயுமில்லை
என் சிரிப்பின் தவிப்பு உன்னால் தானடி
என் வலியின் சுகமும் உன்னால் தானடி..

107

உன் விழிகள் கூறும் விடுகதைகளுக்கு விடை தேடுகின்றேன் காலமெல்லாம்.

108

என் இதயத்தை அன்பெனும்
ஆயுதத்தால் காயப்படுத்தி ஆறுதல் என்ற நூலால் தைத்து விட்டுச் சென்ற அரக்கி அவள்!

109

நிகழ்வுகள் கசப்பானதாக இருந்தாலும் அவை உன் நினைவுகள்எனும் போது மனம் விரும்பியே அதை அசைபோடுகிறது…

110

தொலையாமல்
தொலைந்து கொண்டிருக்கிறேன்
உன் மனம்
எனும் மாய வலைக்குள்…

111

கூடு அடைந்த பறவையின்
இதமான மனநிலை
உன் மார்பில் சாய்ந்திருக்கும்
பொழுதெல்லாம்…

112

அவள் இதழ் முத்தம் பருகிய பிறகு அருந்திய காபிக்கு
ருசி சற்று குறைவு தான்.

113

விலை உயர்ந்த தலையணை
அவள் மடி, விலை கொடுத்து வாங்கியது
அல்ல அன்பை கொடுத்து வாங்கியது.

114

என் இரவின் உறக்கத்தை எல்லாம் தின்று தீர்த்த அரக்கி அவள்.

115

என்னை உப்பு மூட்டை தூக்கி
உலகம் சுற்றி காட்டுகிறேன் என்கிறாள், எனக்கு மட்டும் தானே தெரியும் அவள்
ஞானே என் உலகம் என்று.

116

என்னிடம் காதல் இருந்தது
அவளிடம் காரணம் இருந்தது போதாதா இருவரும் பிரிந்து விட.

117

இதமாய்
இருந்து கொள்கிறேன்
உன் இதயத்தோடு..

118

நம் அன்பை வெறும் நட்பு என்றும் சொல்லிவிட முடியாது காதல் என்றும் சொல்லிவிட முடியாது அது ஒரு அழகான உறவு உணர்ந்தால் மட்டுமே புரியும்…

119

பிரியமானவர்களின் நினைவுகள்
பிரியமாக இருக்கிறதோ இல்லையோ பிரியாமல் இருந்துவிடுகிறது இதயத்தோடு.

120

உன்னோடு பேசிய பின் கண்களில் வழியும் சிறு துளி கண்ணீரில் தெரிகிறது காதலில் வலியும் உண்டு
வலிமையும் உண்டு என்று…!

தமிழ் காதல் மேற்கோள்கள் தமிழில்

121

காதலில் மிக கொடுமையான ஒன்று நம் அன்பை புரியாது நோகடித்தவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என காத்திருப்பது…!!

122

சிரித்து சினக்க வைக்கவும், அழுது சிலிர்க்க வைக்கவும் உன்னால் மட்டும் தானடி சாத்தியம்…

123

நேற்றல்ல, இன்றல்ல,
நாளையல்ல எப்போதுமே
நின்நிழலில் சரணாகதி நான் மட்டுமே …

124

உன்னை நான் கேட்காமலே
உன்னோடு நான் வாழ்கிறேன்….
என்னை நீ சேராமலே
என்னோடு நீ வாழ்கிறாய்….

125

கற்பனைகளாலும் கனவுகளாலும்
கட்டப்பட்ட காதல் கூட்டிற்கு கூலியோ கரைபடிந்த கண்ணீரும் காயங்களும் தான்

126

மீண்டும் வேண்டும், நான் நானாக இல்லாமல் இருந்த நாட்கள் அவளுடன் மூழ்கிய, அவள் தந்த காதலோடு முடிவிலா தேடல்

127

என்
யாருமில்லா தனிமையில்
யாவுமாகி நின்றாய்…
நீ இல்லாமல் போனால்
தனிமை கூட எனக்கு
துணையில்லாமல் போகுமடி..

128

அவளு(னு)க்காகவோ
எப்போது மனமுருகி ஒரு துளி கண்ணீர் வடிக்கிறீர்களோ அப்போது சொல்லுங்கள் அதை உண்மை காதல் என்று, மற்றனைத்தும் வீண்.

129

அன்பே உன்னிடம் சரணடைந்த
குற்றத்திற்காக ஆயுள் தன்டனை கொடு
மரண தண்டனை கொடுத்து விடாதே.

130

உன்னோடு ஆன எனது பொஸஸிவ்னெஸ் என்பது எவரோடும் நீ பேசுவதில் அல்ல, எனக்கான நேரங்கள் பகிரப்படுவதில் மட்டுமே

131

நெற்றிப்பொட்டில் முத்தமிடுகையில் காணமல் போய்விடுகிறது மனைவியின் கோபம்.
படுக்கையில் கட்டியனைக்கும் போது காணமல் போகிறது கனவனின் கோபம்.

132

என்றுமே இல்லாது இதயத்துடிப்பு பன்மடங்கு ஒலித்தது, அவளை கட்டியனைக்கும் போது உதடுகள் துடிதுடித்தன ஏதோ சொல்ல அல்ல அவளின் ரோஜா உதடுகளை சுவைப்பதற்கு

133

இதயம் என்பது உடலுக்குள்
மறைக்கப்பட்டதால் தான், அதன் அழுகை சத்தம்
பலருக்கும் கேட்பதில்லை..

134

பேருந்து/ரயில் பயணத்தில் தொலைந்தவர்களை விட வாழ்க்கை பயணத்தில் தொலைந்தவர்கள் தான் அதிகம்!

ஒரு வரியில் தமிழ் காதல் மேற்கோள்கள்

135

தொலைவுகளால் தொலைந்தவர்களை
இணைத்து விட்டு அருகில்
இருப்போரை தொலைதூரமாக்குவது ஞான் இணையத்தின் இயல்பு…

136

நினைத்த நேரமெல்லாம் அசைபோட உன் நினைவுகள் இருக்கையில் இந்த தனிமை பொழுது தானாய் விலகிடாதா..

137

ஏங்குகிறேன் தினமும் மாலை நேரம் வீடு திரும்பும் உன் வருகைக்காக… நான் சேர்த்து வைத்த அன்பை எல்லாம் உன்னிடம் கொட்டித் தீர்ப்பதற்காக…

138

உன் இடைவிடாத ஆசைகள் என் மார்போடு உன்னை சேர்த்து அணைத்துக்கொள்கின்றன.

139

என் உடலை விட்டு மெல்ல என் உயிர் பிரிவது போல் உணர்வு என்னோடு நீ பேசாத நொடிகளில் ..

140

என் தலை கோதிவிடு நான் கொஞ்சம்
இளைப்பாறி உன் இதய துடிப்பு
தாலாட்டில் நீத்தமும் உறங்குகிறேன் உன் மார்பிலே தலை வைத்து என்கிறாள்.

141

உன்னை எவ்வளவு பிடிக்கும் என்பதை உன்னிடம் நான் கொண்ட கோபங்களின்அளவே சொல்லும்…!

142

எப்போதும் என்னோடு சண்டை போடவே பிறந்திருக்கும் உன்னை சமாளிக்க என்னை தவீர யாரும் இன்னும் பிறக்கவில்லை …

143

ஞன் மனதை களவாடிய காதலனிடம் ‘டா’ என்னும் வார்த்தையை கூட உபயோகிக்காமல் பொக்கிஷம் போல
சேகரித்து வைக்கும் சில
பெண்களின் காதல் பேரழகு..

144

ஒரு பெண்ணின் வெட்கம் திடீர் கோடை மழையை போன்றது..,
எப்போது வரும்னு சொல்லமுடியாது.

145

என்னோடு ரசனை மீதமிருக்கும் வரை
உன்னை ரசித்துக்கொண்டே இருப்பேன் உனக்கே தெரியாமல் ரகசியமாக…

146

உள்ளங்கை அளவு தான் இதயம் என்பதை நம்பாமல்தான் இருந்தேன், உன்னை என்னோடு இணைத்திடும் கைபேசி என் உள்ளங்கையில்
தவழ்ந்திடும்வரை.

ஒரு வரியில் தமிழ் காதல் மேற்கோள்கள்

147

என் காதலை இதயத்துள்ளே வைத்து இருகுவதை விட உன்னிடம் சொல்லி உயிர் கொடுக்க நினைக்கிறேன் ஏற்பாயா என் காதலை.

148

இனி உன்னிடம் பேசப்போவது இல்லை என்னும் கோபம் எல்லாம் உன் முகம் பார்த்து குரல் கேட்கும்வரைதான்.

149

காதல் வெண்ணிலவாய் அவள் என் கையில் சேர்ந்த பிறகு அவள் பிரிவு தேய்பிறையாய் துவங்குவதேனோ.?

150

கண்கள் ரசிப்பதை எல்லாம் நேசிக்க
நினைத்தால் ஒருநாள் அது கிடைக்காத
போது காயப்படுவது கண்கள் அல்ல இதயமே.

151

என் விலையில்லா அத்தனை பிரியங்களும் அர்த்தம் இன்றி பிழையானது உன் மேல் வைத்துவிட்ட ஒற்றை காரணத்தால்…!

152

“அரசே அச்சிட்ட காதல் கடிதம்”அவளுக்கும் சேர்த்து நான் வாங்கி கொடுத்த முதல் பயணச் சீட்டு…

153

நமக்கு பிடித்தவர் நம் அருகிலயே இருப்பது
ஆகச்சிறந்த சந்தோசம், ஆனால் அவர்களுக்கு அப்படி வேறு ஒருவர் இருக்கிறார் எனும் போது ஆகக்கடின வலி,

154

கிடைக்குமா? கிடைக்காதா என்பதை தாண்டி, பிடித்ததை தேடி ஓடுவத்தில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது!
ஒரு தலைக் காதலில்!

155

காதலில் அன்பு என்றைக்கும் தோற்றதில்லை, அதை கையாளும் காதலர்களே தோற்றுபோகிறார்கள்.

156

நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு இருந்து விட்டால் நினைவின் மொழியும், பிரிவின் வலியும் உணர முடியாமலே போய்விடும்…

குறுகிய தமிழ் காதல் மேற்கோள்கள்

157

என் நெஞ்சில் முகம் புதைத்து நீ உறங்கும் நாளுக்காக காத்திருக்கிறேன் எத்தனை நாள் தான் என் காதலை கட்டியணைத்து உறங்குவது…?

158

பொண்ணுங்க காதல் டவுன்பஸ் மாதிரி எப்ப வரும்னு சரியாக சொல்ல முடியறது இல்ல, எப்ப வேணாலும் வரும்

159

அன்பு எனும் விதையை
ஆழமாக ஊன்றினால் காதல் எனும் ஆலமரம் வலிமையாக வளரும்…

160

பிரிவோமென தெரிந்தும் நாம் இணைந்த
ஓர் பொழுதில் இருவரும் சிந்திய கண்ணீர்த்துளிகள் கூட காதல் செய்தன…

161

இரக்கம் இல்லாதவள்
இடையின் இறக்கம் காட்டியே
இதயத்தை இம்சிக்கிறாள்..

162

நீ விட்டு சென்ற வெற்றிடம் வெற்றிடமாகவே இருப்பது வரமாய் நான் கேட்டு வாங்கிய விபோசனம் இல்லா சாபம்…!

163

அவளோடு நானிருந்த நாட்களை சொர்க்கம் என்பதா நரகமென்பதா எனக்குழம்புகிறேன், இவ்வுலகம் அதை chat history என்கிறது..

164

உயிரென அவளை நினைத்தேன்
அப்போது எனக்கு தெரியவில்லை
உயிர் என்பது எப்போது வேண்டுமானாலும்
பிரியும் என்பதை..

165

அவள் விழிகள் என்ன காந்த துருவங்களோ…? என் மனம் அவளோடு ஒரு பக்கம் ஒட்டிக்கொள்ள பார்த்தாலும் எதிர்முனையில் விலகியே செல்கிறாள்.

166

சொல்ல சொல்ல புரியும் அன்பை விட, காலம் செல்ல செல்ல ஒவ்வொரு தருணங்களிலும் உணரும் அன்பே
நிறைவானது..!

அவருக்கான அழகான தமிழ் காதல் மேற்கோள்கள்

167

ஐ லவ் யு என்று உன்னிடம் சொல்வதை விட நான் உன்னை நேசிக்குறேன் என்று கூறும் போது தான் என் காதல் முழுமை அடைந்ததை போல ஒரு மன நிறைவு…

168

வீட்டு சென்றவர்களை எண்ணி கலங்குவதை விட நம் அன்புக்கும் நம்பிக்கைக்கும் அவர்கள் தகுதி
இல்லை என்று விலகிடுவது மேல்.

169

இந்த பேருந்து பயணம் இன்னும் கொஞ்சம் நீளக்கூடாதா என்று சிறு ஏக்கம், என் தேவதை அவள் நிறுத்தத்தில் இறங்கும் போது.!

170

காகிதங்களின் காயங்களும்
பேனாக்களின் கண்ணீரும் இணைந்து உருவாவது தான் கவிதை..

171

நினைவுகளை மறக்க முயன்றாலும் முதல் காதல் நினைவுகளுக்கு என்றும்- முற்றுப்புள்ளி இல்லை…

WhatsApp Tamil Love Quotes

172

காதலில் என்னை ஏன் உனக்கு புரியவில்லை என மன்றாடுவதெல்லாம் வேறு யாரையாவது நீ புரிந்து தொலைந்து விடுவாயோ என்ற ஆதங்கத்தில்தான்.

173

என்னை பீடிக்குமா என உன்னிடம் கேட்பது பயத்தினால் அல்ல நீ பிடிக்கும் என சொல்வதை திரும்ப கேட்பதற்காக மட்டுமே…!

174

உந்தன் கரம் பற்றீடும்
போதெல்லாம் என் ஆயுள் ரேகையும்
கூடுதடி.., விட்டுவிலகிடாதே
ஆயுள் ரேகையும் குறையுமடி..

Leave a Comment