Family Status Tamil
Family Quotes Tamil : “உங்கள் குடும்ப வார்த்தைகளை இங்கு படங்களுடன் தெரிந்துகொள்ள முடியும். வாட்ஸ்அப்புக்கு ஏற்பட்ட தமிழில் குடும்ப மேற்கோள்களையும் இங்கு காணலாம். தமிழில் குடும்பம் பற்றிய மகிழ்ச்சியான மெய்ஞானங்கள், குடும்ப உன்னத கோட்டிகள் மற்றும் குடும்ப நாள் வாசகங்களை தமிழில் பகிர்ந்துள்ளனர்.”
Table of Contents
ToggleJoint Family Quotes Tamil
1
குடும்பம்..! வீடு எனும் கூட்டுக்குள் அன்பெனும் சத்தத்தை கீச்சிடும் பாச பறவைகள்..! |
2
குடும்பம்..! அன்பின் பிறப்பிடம் மகிழ்ச்சியின் இருப்பிடம் பாசத்தின் வளர்ப்பிடம் பக்குவத்தின் காப்பிடம்.. |
3
குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்..! அதை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது.. |
4
ஆனந்தமாக வாழ்க்கை வாழ ஆடம்பரம் தேவை இல்லை அன்பானவர்கள் நம்முடன் இருந்தாலே போதும் |
5
அழகிய குடும்பம் என்பது நானா நீயா என்ற போட்டிகளில்லாது உனக்கென நான் எனக்கென நீ நமக்கென நாமென அரவணைத்து வாழ்வதில் உள்ளது… |
6
கூட்டுக்குடும்பத்தில், பாசமும்… பசியும் எவருக்கும் தனியாக வருவதில்லை…! |
7
குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் வேலை செய்வதில்லை கவிஞனுக்கு…!! |
8
கூட்டுக்குடும்பம் அன்று விலக யோசித்தது. இன்று இணைய யோசிக்கிறது. |
9
கூட்டுக்குடும்பம் கூட்டுக்குடும்பம் நாட்டுப்புறத்தின் அடையாளம். |
குடும்பம் கவிதைகள்
10
கூட்டுக்குடும்பம் வாரி குடுக்கும் கூடு தாத்தா வின் கதைக்கேட்டு எல்லையற்ற அன்பினை பாட்டியின் பக்குவம் அறிந்து பரவசமாய் பாதை காட்டும் பாதுகாப்பான கூடு இன்பம் துன்பம் என அனைத்தையும் எளிதாக்கிடும் கல கலவென களிப்பூட்டும் கூடு பொறாமை படும் இக் கூட்டை கலைத்தது என்னமோ காலம்மாக இருக்கலாம் தொலைத்தது நாம் தானே |
11
குடும்பம் என்பது குருவி கூடு பிரிப்பது எளிது இணைப்பது கடினம் |
12
குடும்ப சுமையை சுமந்துக்கொண்டு வலியுடன் வானில் தரையிறங்காமல் பறந்துக்கொண்டிருக்கும் விமானம் |
13
அன்று கூட்டுக் குடும்பத்தில் நிறைய கதைகள் இருந்தது, இன்று கதைகளில் இருக்கிறது கூட்டுக்குடும்பம் ! |
14
மகிழ்ச்சி என்பது தனக்கானது மட்டும் அல்ல என்பதை உணர்த்தும் இடம் குடும்பம்… |
Happy Family Quotes In Tamil
15
கூட்டுக்குடும்பம் என்பதை எறும்பும், காக்கையும் நினைவுப்படுத்துகிறது தன் இனத்தில் எந்த சுயநலமும் வேற்றுமையும் இல்லையென அதனை கடந்த என் கண்கள் சில நொடிகள் விரக்தி சிரிப்பை உதிர்த்தவாறு ரசித்தன |
16
தனக்கு என்ற வார்த்தை மறைந்து நமக்கு என்ற வார்த்தை பிறக்கும் இடம் குடும்பம்… |
17
அன்பான அம்மாவும்.. தோழமையான அப்பாவும் கிடைத்த குழந்தைகள் யாரும் “தடு”மாறியதும் இல்லை “தடம்” மாறியதும் இல்லை |
18
சிந்தனையில் வேறுபட்ட போதிலும் ஒன்றுபட்டு வாழும் இடம் குடும்பம்… |
19
சரிதான் போடா.. மனம்., சரீங்க_வாய்., வாய்க்கும் மனசுக்குமான இடைவெளியில் ஊசலாடுகிறது குடும்பச்சங்கிலி. |
20
குடும்பம் அன்பின் பிறப்பிடம் மகிழ்ச்சியின் இருப்பிடம் பாசத்தின் வளர்ப்பிடம் பக்குவத்தின் காப்பிடம் |
21
அன்பை கொடுத்து பாசத்தை கொடுத்து பண்பை கொடுத்து தைரியத்தை கொடுத்து இன்பமாய் வாழும் இடம் குடும்பம்… |
22
குடும்பம் என்பது கொடுத்து மகிழ்வதே…அனுதினமும் அன்பு பிறக்கும் இடம் குடும்பம்… |
சந்தோஷத்தோடு வாழும் குடும்பத்தின் வாசகங்கள் இதோ
23
நமது பிள்ளைகளை வறுமை தெரியாமல் வளர்ப்பதில் தவறில்லை நமது உழைப்பு தெரியாமல் வளர்ப்பது தான் தவறு |
24
ஆனந்தமாக வாழ்க்கை வாழ ஆடம்பரம் தேவை இல்லை அன்பானவர்கள் நம்முடன் இருந்தாலே போதும்.. |
25
குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம் அதை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது… |
26
குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம் அதை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது… |
27
மண்ணில் இறக்க போகிறோமே தவி மீண்டும் மண்ணில் ஒன்றாக யாரும் பிறக்க போவதில்லை. வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பதும் ஒரு வரம் தான்…!!” |
28
ஆனந்தமாக வாழ்க்கை வாழ ஆடம்பரம் தேவை இல்லை, அன்பானவர்கள் நம்முடன் இருந்தாலே போதும்..” |
29
கூட்டுக்குடும்பம் திண்ணையில் தாத்தா பின்புறம் பாட்டி மாடியில் பெரியப்பா அடுக்களையில் அம்மா சித்தி என எல்லா இடத்திலும் யாராவது ஒருவர் இருப்பார்கள் திருடன் கூட திருட முடியாத வண்ணம்… இன்று மூன்று அல்லது நான்கே பேர் கைகளில் ஆளுக்கொரு அலைபேசியோடு திருடன் வந்து பக்கத்தில் அமர்ந்தாலும் தெரியாது |
30
மனதுக்குள் ஆயிரமாயிரம் ஆசைகள் வைத்திருந்தாலும் அதை வெளிகாட்டாமல் தன் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து எதையும் அனுபவிக்காமல் கடந்து செல்லும் ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஆணும் போற்றப்பட வேண்டியவன். |
31
குடும்பம் உறவுகளினன் இருப்பிடம் அன்பின் கூடு நகைச்சுவை மைதானம் அறிவு பள்ளி இன்பத்தோட்டம் கருணைக் கோவில் |
32
என் வாழ்வில் முதலில் என்னை சந்தித்து என் முதல் காதலைப் பெற்ற முதல் ஆண்மகன் என்னுயிர் தந்தையே!!! |
குடும்பம் சொல்
33
பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை தாங்கிடும் ஒரே உயிர் அப்பா!! |
34
எத்தனை துன்பம் இருந்தாலும் மறந்து போகிறோம் உன்னோடு பேசும் அந்த நேரத்தில்.. |
35
ஒரு பெண்ணின் முதல் காதலை அடைந்து விட்டோம் என்று கர்வம் வேண்டாம் அவளின் முதல் காதல் என்றுமே தந்தை தான் உடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும்!!! |
36
என் அன்பு தங்கைக்கு, நான் தாயாகும் முன்பே அந்த உணர்வை உணர வைத்தவளே! எப்போதும் மனதில் இருப்பாய் என் முதல் குழந்தையாய்!! |
Family Quotes Tamil 37 to 50
37
கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு கடவுளே கிடைத்தார் வரமாக அப்பா!! |
38
ஆயிரம் மடங்கு அன்பை உள்ளே வைத்து கொண்டு எதிரியை போல் நடமாடும் ஓர் உயிர் அப்பா !! |
39
மகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்.. அவள் மகள் அல்ல.. தாயின் மறுபிறவி என்று…!! |
40
தன் தங்கையை முதல் குழந்தையாக நினைக்கும் அண்ணன்களும் தாய்மையின் பிம்பங்களே!!! |
41
கூட்டுக்குடும்பம் அந்த காலத்தில் ஒரு வீட்டுக்கு எட்டு பேர் இருக்கும் வரை வீடு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் !! அதுவே அந்த வீட்டுக்கு மருமகள் னு ஒருவர் வரும்போது தான் அந்த வீட்டோட சந்தோசமே vera levalla இருக்கும் !! கூட்டு குடும்பம் கூட்டு இல்லாத குடும்பமாக மாறிடும் !! (இதுவும் சில பெண்களால் தான் நடக்கும்) |
42
மனைவியின் சிரிப்பிற்க்காகவும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் பல அப்பாக்களின் சந்தோசங்கள் தொலைக்கப் படுகின்றன!! |
43
தன் வாழ்க்கையையே நமக்கேன அரப்பனைத்த தாய் தந்தையை மறப்பவன் மனிதன் அல்ல!!!! |
44
குடும்பத் தலைவன். தலை நிமிர்ந்து நடந்தால் மகிழ்வான தருணங்களை யோசிக்கிறான். தலை குனிந்து நடந்தால் இகழ்வான சூழல்களை யோசிக்கிறான். நேருக்கு நேராய் பார்த்து நடந்தால் நிதர்சனங்களை யோசிக்கிறான். ஆனால், இன்னும் எந்த எல்லையையும் தொடவில்லை. |
45
நம் பசியறிந்தே பசியாற்றுபவள் தாய்!! தன் பசிமறந்தே பசிபோக்குபவன் தந்தை!! |
46
“குடும்பங்களில் காட்டப்படும் எல்லா கோபங்களுக்கு பின்னாலும் ஒரு வித அன்பு இருக்கிறது என்பதை மட்டும் தெரிந்திட மறக்கிறோம் நாம்’ |
47
மற்றவர்கள் குடும்பத்தில் சண்டை இழுத்து விட்டு வேடிக்கை பார்ப்பதே பலருக்கு பிடிக்கும் போல… நீ மற்றவரை கெடுக்க நினைத்தால் உன்னை கெடுக்க ஒருவன் வருவான்.. |
48
ஊசி கையில் ஏறாமல் ஒரு வேளை ஏறினாலும் துடைத்து விட்டு சரியாக நினைத்த வடிவத்தில் தைத்து முடிப்பது போன்ற கலை தான் கூட்டுக் குடும்பம்… ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு வடிவத்தில்…. ஊசியாய் குத்திக் கிழிக்கும் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் மத்தியில் வடிவம் மாறாமல் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல… அதே நேரம் முடியாத காரியமும் அல்ல.. |
49
குடும்பம் உறவுகளின் இருப்பிடம் அன்பின் கூடு நகைச்சுவை மைதானம் அறிவு பள்ளி இன்பத்தோட்டம் கருணைக் கோவில் |
50
ஊருக்கே அரசனாய் வாழ்ந்தாலும் மகளுக்கு அடிமையாய் தான் வாழ்கிறார்கள் தந்தைகள் |
Family Quotes Tamil 51 to 65
51
குடும்பம் எனப்படுவது நேருக்கு நேர் மோதிப்பார்த்துவிடவேண்டுமென்று தான் நிதம் நினைக்கிறேன்-பின் உடைந்த கண்ணாடியில் அழகான பிம்பம் காண இயலாது என தவிர்க்கிறேன். |
52
‘மனைவி கருவில் சுமக்காத முதல் குழந்தை தான் கணவன். ” கணவனை பெற்றெடுக்காத இரண்டாவது தாய் தான் மனைவி.. |
53
கூட்டுக்குடும்பம் அனைத்து பூக்களையும் கலந்து கட்டிய கதம்ப மாலை….. வண்ணங்கள் வேறாகலாம் எண்ணங்கள் எல்லாம் ஒன்றே இனிமை…….இனிமை..! |
54
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்.. அன்னையே உன் போன்று அன்பு செய்ய யாரும் இல்லை இவ்வுலகில்.. |
55
நீ தேடி சென்றாலும் விலகி செல்வது மற்றவர்கள் நீ விலகி சென்றாலும் உன்னை தேடி வருவது பெற்றவர்கள் |
கணவன் மனைவிக்கு குழந்தை பிறப்பது இயல்பு..ஆனால், கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும், குழந்தையாவது வரம்..! |
56
கூட்டுக்குடும்பம் இன்று காலாவதி ஆனது. கூடாத குடும்பம் இன்று காதல் மறந்து போனது… |
57
எல்லா குற்றங்களையும் மன்னிக்கும் ஒரே நீதிமன்றம் அம்மாவின் இதயம்..!! |
58
தூக்கத்தில் உன்னைப்பற்றி நினைப்பவள் காதலி தாங்காமல் கூட உன்னையே நினைப்பவள் தாய் |
59
தாய் என்பவள் பத்து திங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தாள். “தந்தை”என்பவன் வாழ்க்கையையே தன் குழந்தைக்காக தியாகம் செய்தான். |
60
ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறையில்லை அம்மா சமயலறை.. |
61
அண்ணனோடு பிறக்காத எல்லா பெண்களுக்கும் உண்டு எந்த ஆணாவது தங்கச்சி என்று அழைக்கமாட்டார்களா என்ற ஏக்கம்.. |
62
நம்மை உள்ளங்கையில் வைத்து தாங்கும் உறவுகள் கிடைப்பதை விட, நம்மை உதறி தள்ளி விடாத உறவுகள் கிடைப்பதே வரம்… |
63
அன்பை உள்ளே வைத்து கொண்டு எதிரியை போல் தெரியும் ஒரே உறவு அப்பா! |
64
அம்மா உன் காலம் நரைக்கும் நேரத்தில் என் நேரம் உனக்காய் இருக்க போவதில்லை தெரிந்தும் காக்கிறாய்.. உன் இமைக்குள் வைத்து என்னை கடமைக்காக அல்ல.. கடனுக்காக அல்ல.. கடவுளாக.. |
65
அன்பு அக்கறை அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையான வாழும் கடவுள் அம்மா.. |
Family Status Tamil 66 to 80
66
கூட்டுக்குடும்பம் குதுகலமாய் இருக்கும்… தவிர்க்க மாட்டேன்.. தவிர்க்கவும் விட மாட்டேன்.. |
67
விடுமுறை நாட்களில் வேடந்தாங்கலாக மாறிவிடும்.. தாத்தா, பாட்டி வீடு பேரன், பேத்தி வருகையால் |
68
அப்பாவின் அருமை தெரியனும்னா சொந்தமா சம்பாதிச்சு செலவு செய்யனும் அம்மாவோட அருமை தெரியனும்னா சொந்தமா சமைச்சுச் சாப்பிடனும் |
69
என் அன்னையின் கண்ணில் நான் கற்றது அன்பு என் தந்தையின் கண்ணில் நான் கற்றது வீரம் என் கண்ணில், எனது பெற்றோர் கண்டது மரியாதை |
70
என் அன்னையின் கண்ணில் நான் கற்றது அன்பு என் தந்தையின் கண்ணில் நான் கற்றது வீரம் என் கண்ணில், எனது பெற்றோர் கண்டது மரியாதை |
71
கூட்டுக்குடும்பம் கூட்டுக்குடும்பத்தின் வேர் தாத்தா பாட்டிதான். இப்போ கூட்டுக்குடும்பமும் இல்ல கூட்டாஞ்சோறுமில்லை. |
72
நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால் வீட்டிருக்கு சென்று உங்கள் குடும்பத்தை நேசிக்கவும். |
73
காதலை பற்றி எப்போதும் என் விரலும், இதழும் கொஞ்சி பேசும் ஆனால் குடும்பத்தையும்,நட்பையும் இருதய இசையென என் உயிரே கொஞ்சி பேசும் புகழ்ந்து தள்ளும், கொண்டாட்டமாய் பார்க்கும், கோலாகலமாய் வரவேற்கும், எப்போதும் ரசிக்கும், என்னோடே இருக்கும். |
74
குடும்பத்திற்காக வாழும் பெண்களின் வாழ்வு, தயங்கி தயங்கி, தேங்கி பாசி படர்ந்து தான் போகிறது, நடுவில் ஒற்றையாய் நிற்கும் அல்லியை அனைவரின் கண்களும் சுலபமாய் காட்சியிலிருந்து தவிர்த்து விடுகின்றது. |
75
வயதால் எவ்வளவு தான் வளர்ந்தாலும் அக்காவிற்கு தன் தம்பி எப்பொழுதும் ஒரு குழந்தை தான் |
76
நாம் வாழும் வீட்டில் எத்தனை வசதி இருக்கிறது என்பதை விட, எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதே முக்கியம்… |
77
தான் பெற்ற பிள்ளைகளிடம் காட்டிய கஞ்சத்தனத்தை பேரப்பிள்ளைகளிடம் காட்டுவதில்லை தாத்தாக்கள் |
78
மகிழ்ச்சியை தேடி வெகு தாரம் செல்லும் பல பேர் அருகில் இருக்கும் மகிழ்ச்சியை தொலைத்தே செல்கின்றனர்.. அது தான் குடும்பம் |
79
சில உறவுகள் யோசித்து பேச வைக்கும்.. சில உறவுகள் பேசியதை யோசிக்க வைக்கும்.. சில உறவுகள் பேசவே யோசிக்கும்.. |
Family Status Tamil 80 to 95
80
நாம் வேண்டாமலே நமக்கு வேண்டியதை செய்யும் கடவுள் அப்பா |
81
நம்மிடம் எவ்வளுவு சொத்து இருந்தாலும் அம்மாவுக்கு நாம்தான் மிகப்பெரிய சொத்து |
82
குடும்பத்தில் சிறு பிரிவு இயல்புதான்! கூம்பியிருக்கும் மொட்டுகளின் இதழ் பிரிந்தால் தானே மலர் ஆகும்! |
83
தங்கை எவ்வளவு அழகாக இருந்தாலும் தங்கையின் அழகை பழிக்கும் அண்ணன்களும், அண்ணன் எவ்வளவு தான் சோம்பேறியாக இருந்தாலும் யாரிடமும் விட்டுக்கொடுக்காத தங்கையும் தான் அண்ணன் தங்கை உறவிற்கு சிறந்த உதாரணம்.. |
84
இந்த உலகில் எங்கு தேடினாலும் உனக்காக ஒரு துளி உண்மையான கண்ணீரை யாரும் சிந்தமாட்டார்கள் அம்மாவை தவிர.. |
85
குடும்பக் கட்டுப்பாடு வேண்டும் / வேண்டாம் தீர்மானிப்பது என்னவோ கணவனும் கணவன் சார்ந்த இனமும்தான் !! |
86
எப்போதுமே நமக்குளே வருமே வேற்றுமை அந்த வேற்றுமையிலும்.. ரத்த பந்த சொந்தத்தால்.. வளரும் நமக்குளே ஒரு ஒற்றுமை! |
87
மனைவியை எங்கும் வீட்டுக் கொடுக்காத கணவன் கணவனிடம் எதையும் மறைக்காத மனைவி நண்பர்கள் போன்ற பிள்ளைகள் இவையாவும் அமைந்தால் வாழ்க்கை சொர்க்கமே |
88
உலகமே உன்னை தூக்கி எறிந்தாலும் உன்னை ஏந்தி பிடிக்கும் ஒற்றை கயிறு குடும்பம் |
89
அம்மாவின் அன்பினில்.. அப்பாவின் பாசத்தில்.. தங்கையின் குறும்புகளில்.. கட்டமைக்கப்பட்டது| இவள் உலகம்! அதைத் தாண்டி இவள்.. எதுவும் அறியவில்லை அறியவும் விரும்பவில்லை! |
90
கூட்டுக்குடும்பம் இன்றும் வாழ்கிறார்கள் செருகு ஏடுகளில் நிழற்படங்களாய் |
91
கூட்டுக்குடும்பம் மனிதரிடத்தில் மறைந்து போனது.. மரங்களின் இனத்திலாவது மறையாமல் வாழட்டும் காடுகளாக.. |
92
குடும்பம் என்பது இரத்த பந்தத்தில் இணைவது மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் அன்புடனும் புரிதலுடனும் இருத்தலும் தான். |
93
குடும்பம் இரத்தத்தால் உருவான பந்தம் இணைகின்ற சொந்தத்தால் வளரும் ஆயிரம் சண்டைகள் வந்தாலும் உறவை மறக்க முடியாது. |
94
கூட்டுக்குடும்பம் அன்றைய கூட்டுக்குடும்பம் கலைந்து கூட்டுக்குள் குடும்பம் ஆனது இன்று |
95
குடும்பம் தான் தன் உலகம். தன் குடும்பதிற்காக தன்னையே அர்பணித்து வாழும் அனைவருக்கும். உலக குடும்பதின் நல் வாழ்துக்கள்!!.. |
Family Quotes Tamil 96 to 101
96
அழகிய குடும்பம் என்பது உணர்வுகளின் தாலாட்டு!!! |
97
கூட்டுக்குடும்பம் அழகிய கலவரங்களும், பரபரப்பான சூழலும், கசப்பான நிகழ்வுகளையும் தோழமையாலும் சகதோரத்தாலும் இனிக்க மாற்றும் வண்ண களஞ்சியம் …….. |
98
கூட்டுக்குடும்பம் வேப்பமர நிழலில் ஊஞ்சலாடிய என்னை அடுத்தவீட்டு யாரையோ பார்த்து அடித்து அடித்து திணித்து விமானத்தில் ஏற வைத்த பாவத்திற்கு என் அப்பனும் அங்கே தனிமையில் பங்களாவில் நானும் இங்கே தனிமையில் வேகாததை தின்று விட்டு உறக்கமின்றி என்னவளும் பிள்ளைகளும் அடுத்தடுத்த அறைகளில் ஏதோ செய்தபடி… |
99
அழகிய குடில்! அன்பெனும் திறவுகோல்! பாசத்தின் செங்கோல் ஆட்சி! பார் போற்றும் குடும்பம்! பெண்ணாலே சாத்தியம்!!! |
100
கூட்டுக்குடும்பம் மறந்து போன மரத்துப் போன மனிதர்களால் கூட்டுக்குடும்பம் கானல் நீரானதே …. |
101
உன் மீது நான் கொண்ட அன்பு ஏளனமாய் இன்று… தாயோடு ஒட்டிய கன்றென சுற்றி வருவாய் அன்று… பெற்றேன் ஈன்ற பேறு முதியோர் இல்ல வாசத்தால் ஏனோ எப்பொழுதும் இறைவனிடம் இறைஞ்சுகிறேன் என்றும் நான் பெற்ற இப்பேறு உனை பற்ற வேண்டாமென்று |
Family Quotes Tamil 102 to 106
102
ஏன் பக்குவமடைந்தோம் என பதறிய நாட்கள் பல குடும்ப சூழ்நிலையால் அல்ல குடும்பத்தில் நிலவும் சூழ்நிலையால் |
103
குடும்பமாய் வாழும் எங்களுக்கு மகிழ்ச்சி அதிகம் |
104
கூட்டுக்குடும்பம் பருப்பு நெய். குழம்பு, ரசம்,பொரியல்,கூட்டு, பச்சடி,வடை, அப்பளம், பாயாசம்_வாழை இலையில். தனிக்குடித்தனம் |
105
நமக்காக அப்பாவிடம் தூது செல்லும் அம்மாüc கட்டுகடங்காத பாசமிருந்தாலும் வெளிப்படுத்தத் தெரியாத அப்பா!! சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டையிட்டாலும், தாயென அன்பு செய்யும் சகோதரிகள்!!! சகோரதரிகளின் கண்ணீரில் கரைந்தே போகும் சகோதரன்கள்!!! குறை சொல்லிக்கொண்டே இருந்தாலும், அன்பில் குறை வைக்காத மாமா அத்தை!!! குறைவில்லா இன்பத்திலும் அளவில்லா துன்பத்திலும் துணை நிற்கும் குடும்பமே நம் சொத்து!!. |
106
காசு பணம் தேவையில்லை உன்னைப் பற்றி கவலைப்பட ஒரு குடும்பம் இருந்தால் நீ கோடீஸ்வாரனே.. |